Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…. விடிய விடிய பேருந்து ஓடும்… எம்டிசி அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையையொட்டி 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று எம்டிசி  நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளுக்காக சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதன்படி கோயம்பேடு, கேகே நக,ர் தாம்பரம், சானடோரியம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து இன்று முதல் நாளை மறுதினம் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை மாநகரின் பல்வேறு பகுதியில் வசிக்கும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக இன்று முதல் நாளை மறுதினம் வரை 310 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன. இந்த நாட்களில் சிறப்பு பேருந்து சேவை 24 மணி நேரம் அதாவது விடிய விடிய வழங்கப்படும் என்று எம்டிசி  நிர்வாகம் கூறியுள்ளது. இதேபோன்று பொங்கல் திருநாளையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம் சுற்றுலா இடங்களுக்கும் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |