Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உருமாறிய கொரோனா…. செஞ்சுரி அடிக்க போகுது…!!

பிரிட்டனிலிருந்து பரவிய புதிய வகை கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிகள் அவசரகால பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கான ஒத்திகை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதையடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் படிப்படியாக ஆரம்பிக்கபடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய வகை கொரோனாவின் பாதிப்பு வேகம் அடைந்து வருகிறது.

பிரிட்டனில் மரபு ரீதியாக மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஒன்று பரவியது. இதனால் அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அங்கிருந்து வந்த பயணிகளின் மூலமாக டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை வரை புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 90 ஆக இருந்தது.

இந்த சூழலில் இன்று பிற்பகல் நிலவரப்படி ஒரு 96 பேருக்கு பரவியதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் பயணித்தவர்கள் உள்ளிட்டோரும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள் உரிய ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது.

Categories

Tech |