நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் பாலிவுட் படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைப் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார். தமிழ் ,மலையாளம் ,தெலுங்கு என பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார். அதன்படி இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மும்பை கார் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் .
இதையடுத்து இதில் நடிகர் விஜய் சேதுபதி காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் மேலும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார் . இந்த படத்தை அந்தாதுன் படத்தை இயக்கி பிரபலமான ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார் . தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக கத்ரீனா கைஃப் நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .