Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாடிவாசல் முன்பு திருமணம் செய்யணும்” … மதுரையில் காதல்ஜோடி மனு..!!

மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு திருமணம் செய்ய மதுரையில் காதல் ஜோடிகள் மனு அளித்துள்ளனர்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்பு திருமணம் செய்து கொள்ள அனுமதிக்குமாறு காதல் ஜோடி இன்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் சேர்ந்த நித்யதாரணி என்பவரும், அலங்காநல்லூர் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர்.

அவர்கள் திருமணம் செய்துகொள்ள இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் ஜனவரி 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி அளவில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் காலை அவிழ்த்து விடுவதற்கு முன்பு வாடிவாசலில் முன் திருமணம் செய்ய நடத்திக்கொள்ள கால்மணி நேரம் அனுமதிக்குமாறு காதல் ஜோடிகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Categories

Tech |