Categories
அரசியல் மாநில செய்திகள்

நடிகர்களை பார்க்க கூடும் கூட்டம்… அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி கருத்து…!!!

நடிகர்களின் அரசியல் பிரச்சாரங்களில் அதிகமாகக் கூட்டம் கூடுவது பற்றி அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் நடிகர்கள் அரசியலில் இறங்கி உள்ளதால் அவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர்களின் அரசியல் பிரச்சாரங்களில் அதிகமாக கூட்டம் கூடுவதை பற்றி அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். நடிகர்களை பார்ப்பதற்கு மட்டும் தான் கூட்டம் கூடும், அதை ஓட்டு என்று நினைக்க முடியாது. 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுக்கு பிரசாரம் செய்த நடிகை குஷ்பு மற்றும் நடிகர் வடிவேலுவுக்கு மிகப் பெரிய கூட்டம் கூடியது. ஆனால் அந்தத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |