Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஸ்கெட் போட்ட அதிமுக… ஈபிஎஸ்-ஸின் ஒரே உத்தரவு….ஷாக் ஆன திமுக …!!

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடப் படும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அடைதரர்களும் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ஊக்கத் தொகையாக ரூபாய் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். அந்த வகையில் கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி 12ஆம் தேதிக்குள் இதனை விநியோகம் செய்யவும், குறிப்பிட்ட நாளில் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் வாங்க வில்லையென்றால் 13ஆம் தேதியன்று வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த உத்தரவு மேலும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் ஊக்க தொகை குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபட்டு விடாமல் இருப்பதற்காக வரும் 18-ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை நியாயவிலைக் கடைகளில் விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகையை வினியோகம் செய்ய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

குறிப்பாக பொங்கல் துணிப்பை பெறாதவர்களுக்கு பொங்கல் துணிப்பை வழங்கிட வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் 18ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை யாரெல்லாம் பொங்கலுக்கு பரிசு வகுப்பு மற்றும் 2500 ரூபாய் ஊக்கத்தொகையை பெறாதவர்கள் பெற்று கொள்வதற்கான ஒரு சுற்றறிக்கையை தமிழக அரசு சார்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.

தமிழக சட்டமன்றம் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் தமிழக அரசின் இந்த 2500 ரூபாய் உதவித் தொகை பொங்கல் பரிசு எதிர்க்கட்சி திமுகவை நிலைகுலையச் செய்தது. இதற்க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது 25ஆம் தேதி வரை பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற இந்த உத்தரவு ஆளும் அரசுக்கு தேர்தல் பிரச்சார உத்தியாக இருப்பதால் திமுக நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

Categories

Tech |