தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து உள்ளனர். வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் .
https://twitter.com/XBFilmCreators/status/1348608483927617536
தொடர்ந்து ஆறு நாட்களாக மாஸ்டர் படத்தின் புரோமோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதில் விஜய்யின் மாஸ் வசனங்கள் ,வாத்தி கம்மிங் ,வாத்தி ரைடு,பொளக்கட்டும் பற பற பாடல் ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் விஜய்யின் மாஸ் வசனங்கள் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த புதிய புரோமோ வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.