Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்கு நீங்க ஏன் வரவில்லை?… ரசிகரின் கேள்விக்கு சுரேஷின் அதிர்ச்சி பதில்…!!!

பிக்பாஸ் வீட்டுக்கு சுரேஷ் வராததன் காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் ரசிகர்களிடையே இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார்? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் என்பதால் வெளிறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தந்துள்ளனர். இன்று  போட்டியாளர்கள் அனைவரும் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருந்த புரோமோக்கள் வெளியாகியிருந்தது . இதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீடு சண்டைகள் எதுவும் இன்றி மகிழ்ச்சியாகவும் கலகலப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அர்ச்சனா ,ரேகா ,நிஷா ,ரமேஷ் ஆகியோர் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

மீதமுள்ள சனம் , அனிதா போன்ற மற்ற போட்டியாளர்கள் நாளை வருவார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் பிக்பாஸ் சுரேஷிடம் ரசிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டுக்கு நீங்க ஏன் வரவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார் . இதற்கு சுரேஷ் ‘இதுவரை தனக்கு பிக்பாஸில் இருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை’ என அதிர்ச்சியளிக்கும் பதிலை கொடுத்துள்ளார். பிக்பாஸ் போட்டியாளர்களில்  தனக்கு மட்டுமே இன்னும் அழைப்பு வராததாக அவர் கூறியுள்ளார் . இதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |