சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் காசிப்பூர் பகுதியில் உள்ள பொது சமையலறையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 4 பேர் உயிர் இழந்த நிலையில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் அருகில் உள்ள 50க்கும் அதிகமான வீடுகளில் தீ வேகமாக பரவியுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடிய பின்னர் தீ கட்டுக்குள் வந்ததுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டடுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்ய சிவில் பாதுகாப்பு நிறுவனமும் தீயணைப்பு துறையும் குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.