Categories
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மீனவர்கள் 20 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பு..!!

கன்னியாகுமரியை சேர்ந்த 20  மீனவர்கள் ஆழ்கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

கன்னியாகுமரி சின்னத்துறை என்ற கிராமத்தை  சேர்ந்த 20  மீனவர்கள் கடந்த 18-ம் தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கு கடலுக்குள் சென்றுள்ளனர். மீனவர்கள் லட்சத்தீவு அருகேயுள்ள  தித்திரா தீவுப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 படகுகள் திடீரென பழுது ஏற்பட்டது.

Related image
இதையடுத்து படகு நடுக்கடலில் பழுதானதால் உணவு மற்றும் குடிநீரின்றி மீனவர்கள் தத்தளித்து வருகின்றனர். மீனவர்கள் 20 பேர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆழ்கடலில் சிக்கி தத்தளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |