தமிழகத்தில் போகிப்பண்டிகை அன்று டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரித்து விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் போகிப்பண்டிகை அன்று பழைய பொருட்களை கொளுத்துவது வழக்கம். பழைய பொருட்கள் மட்டுமல்லாமல் மக்கள் தங்கள் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் சேர்த்து தீ வைத்துக் கொளுத்தி, நல்ல எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காகவே போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் போகி பண்டிகை அன்று டயர் மற்றும் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரித்து விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என சென்னை மற்றும் சேலம் விமான நிலையங்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டு போகி புகையால் சென்னையில் விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.