உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்கின் காதலி கிரிம்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக பணக்காரர்களில் தற்போது நம்பர் 1 இடத்தில் இருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க். உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜேப் பெசோஸை பின்னுக்கு தள்ளி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் முதலிடம் பிடித்தார். இந்நிலையில கனடாவைச் சேர்ந்த பாப் பாடகரும் எலான் மஸ்கிகன் நீண்ட நாள் காதலியும் கிரிம்ஸுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து கிரிம்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடைசியாக எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது நான் வினோதமாக டே-க்வில் வீவர் ட்ரீம்ஸ் பாடலை என்ஜாய் செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் எலான் மஸ்கும் கிரிம்ஸும் காதலித்து வருகின்றனர். கிரிம்ஸ் கடந்தாண்டு மே மாதம் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்தார். கிரிம்ஸ் தனது காதலர் எலான் மஸ்க்கிற்கும் அவரது குழந்தைக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதா, அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது போன்ற தகவல்களை தெரிவிக்கவில்லை