Categories
அரசியல் மாநில செய்திகள்

ராஜபாளையம் தொகுதியில்…. போட்டியிடும் நடிகை கௌதமி…? வெளியான தகவல்…!!

ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டியிடலாம் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் ராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கௌதமி போட்டியிடலாம் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகை கௌதமி கலந்து கொண்டுள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவர் தமிழகத்தின் வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே பாதையில் பயணிக்கவேண்டும். அரசியலில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் கூட்டணி என்று வந்துவிட்டால் அனைத்தும் ஒன்றாகி விடும். தீய சக்திகளை அளிக்க வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு எனவும் தெரிவித்துள்ளார். இராஜபாளையம் தொகுதியில் கவுதமி போட்டியிட முடிவு செய்துள்ளதாக காரணத்தினாலே பொங்கல் விழாவில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |