Categories
சினிமா தமிழ் சினிமா

பயங்கரமாக மோதிக் கொள்ளும் விஜய்- விஜய் சேதுபதி… மாஸ்டர் புதிய போஸ்டர்… இணையத்தில் வைரல்…!!!

நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் .

https://twitter.com/XBFilmCreators/status/1348585530087247875

தற்போது தொடர்ந்து 6 நாட்களாக மாஸ்டர் படத்தின் புதிய ப்ரோமோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது . இந்நிலையில் இன்று மாஸ்டர் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு ‘எப்டி எங்களோட சர்ப்ரைஸ் ?’ என ரசிகர்களிடம் கேட்டுள்ளது . அந்த போஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி பயங்கரமாக மோதிக் கொள்கின்றனர் . தற்போது இணையத்தில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது .

Categories

Tech |