திருவனந்தபுரத்தில் நடிகை நமீதா கிணற்றில் விழுந்து விட்டதாக பதறியடித்துக்கொண்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி பார்த்தனர்.
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் மிகவும் கவர்ந்து இழுத்த நடிகை நமீதா. அவரின் நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் கிடையாது. அவர் தற்போது “பவ் பவ்” என்ற திரைப்படத்தை தயாரித்து, அதில் நடித்து வருகிறார். அந்தப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் , நமீதா கிணற்றில் விழுந்து இருக்கிறார்.
அதை பார்த்த அப்பகுதி மக்கள் உண்மையிலேயே நமீதா கிணற்றில் விழுந்து விட்டதாக நினைத்து பதறியடித்து போய் பார்த்துள்ளனர். அதன்பிறகு படக்குழுவினர் இது வெறும் படத்தின் காட்சி தான் என்று ஆறுதல் கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.