அரச குடும்பத்தை விட்டு பிரிந்த தம்பதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டனில் அரசு குடும்பத்தை சேர்ந்த ஹாரி மற்றும் மேகன் என்ற தம்பதி கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் செய்துள்ளனர். அதன் பிறகு இருவரும் கடந்த 2019 ஆம் வருடம் அரச குடும்பத்திலிருந்து விலகி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மகனுடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அரச குடும்பத்தில் இருந்து விலகிச் சென்ற ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தற்போது அரச குடும்பத்துடன் இணைய உள்ளார்கள். இந்த வருடம் ஜூன் மாதத்தில் 12ஆம் தேதி லண்டனில் ராணியின் பிறந்தநாளில் நடைபெற இருக்கும் அணிவகுப்பில் இந்த தம்பதியினர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மகாராணியின் 95 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு Troophing of the colour என்றழைக்கப்படும் ராணுவ அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். மேலும் கொரோனா தாக்கத்திற்கு பின்பு ஐக்கிய இராச்சியத்தின் முதல் தேசிய கொண்டாட்டம் இந்த அணிவகுப்பு தான் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த வருடம் கொரோனாவின் தாக்கத்தினால் இந்த நிகழ்ச்சியில் அரச குடும்பத்தினர் எவரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் ராணி எலிசபெத் இந்த அணிவகுப்பை தனியாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எலிசபெத் ராணியின் பிறந்த நாள் அணிவகுப்பு லண்டனில் இயல்பாக நடைபெற வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரத்தில் கொரோனா தொற்று எந்த நிலையில் இருக்கும் என்பதன் அடிப்படையில் தான் இறுதியான முடிவுகள் எடுக்கப்படும் என்று அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.