Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னடா இது கமலுக்கு வந்த சோதனை… கூச்சலிட்ட மக்கள்…!!!

மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது மக்கள் ஆரி… ஆரி.. என கூச்சலிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இவர்களுக்கு மத்தியில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, வாகனத்தில் நின்று கொண்டு மக்களை நோக்கி கமல்ஹாசன் கையசைத்து கொண்டிருக்க, மக்கள் ஆரி… ஆரி…என பிக் பாஸ் போட்டியாளரின் பெயரை குறிப்பிட்டு கூச்சலிடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |