வீட்டில் தனியாக இருந்த சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாம் நகரில் ஜெய்லானி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமீம் பாஷா என்ற மகனும். தஸ்லீம் என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் தஸ்லிம் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மீட்டு உடனடியாக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அப்போது அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து ஜெய்லானி ஆர்.கே. பேட்டை போலீசாரிடம் தனது மகள் வயிறு வலி தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.