சுக்கில் எவ்வளவு அற்புதமான மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
சுக்கு நம்முடைய உடளலுக்கு பல மருத்துவ பயன்களை கொடுக்கிறது. இந்த சுக்கினை நாம் அன்றாடம் கூட எடுத்து கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது இந்த சுக்கில எவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.
பயன்கள்:
1.கை, கால் வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏதாவது இருந்தால் சுக்குடன் சிறிது பால் சேர்த்து அரைத்து நன்கு சூடாக்கி இளம் சூடாக அதனை வலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
2.சுக்கை பொடி செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்த நோய் குணமாகும்.
3.சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை ஆகியவற்றை கஷாயம் செய்து குடித்து வந்தால் கடும் சளி குணமாகும்.
4.சுக்குடன் சிறிது வெற்றிலை மென்று சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை குணமாகும்.
5.வாதம் குணமாக சுக்கு மற்றும் வேப்பம் பட்டை இரண்டையும் சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்.
6.அதிகமாக தலைவலி இருந்தால் சுக்குடன் சிறிது நீர் சேர்த்து மைய அரைத்து நெற்றியில் பற்று போட்டால் தலைவலி பறந்துவிடும்.
7.உடல் அசதி சோர்வு நீங்க சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து சுக்கு நீர் காய்ச்சிக் குடிக்கலாம்.
8.அலர்ஜி பிரச்சனைகளுக்கு சுக்கு மற்றும் தேன் சேர்த்து பொடி செய்து தேனில் குழைத்து சாப்பிட வேண்டும்.
9.குழந்தைகளுக்கு மந்தம் குணமாக சுக்கு, மிளகு, சீரகம் பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை மாலை அருந்தினால் மாந்தம் குணமாகும்.
10.சுக்குடன் மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர தொண்டைக் கட்டி குணமாகும்.
11.வாந்தி, குமட்டல் இருந்தால் துளசி மற்றும் உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டால் குணமாகும்.
12.வயிற்றுப் புண் இருந்தால் தயிர் சாதத்துடன் சுக்கை போடி செய்து உணவோடு சேர்த்து சாப்பிடலாம்.
13.சுக்குடன் கொத்தமல்லி சேர்த்து கசாயம் செய்து சாப்பிட மூலநோய் குணமாகும்.
14.சுக்கு, கொஞ்சம் மிளகு, வெற்றிலை மூன்றையும் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் பூரான் கடி போன்ற இஷன்களும் முறியும்.