மாஸ்டர் திரைப்படத்தின் லீக்கான காட்சிகளை மக்கள் பகிர வேண்டாம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர். இதனை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறனர். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இதையடுத்து லோகேஷ் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், “மாஸ்டர் படத்தை மக்களின் பார்வைக்குக் கொண்டுவர ஒன்றரை ஆண்டுகளாக போராடி இருக்கிறோம். இந்த படத்தை திரையரங்குகளில் நிச்சயம் ரசிப்பீர்கள்.
இந்த படம் சம்பந்தமான காட்சிகள் ஏதாவது உங்கள் கண்ணில் தேவைப்பட்டால் தயவுசெய்து ஷேர் பண்ண வேண்டாம். எல்லோருக்கும் நன்றி. இன்னும் ஒரு நாள் தான் இருக்கிறது. இது உங்களுடைய மாஸ்டர்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சில மணி நேரத்துக்கு முன்பாக மாஸ்டர் படத்தின் சில நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகிய படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் இணையத்தில் வெளியான காட்சிகளை நீக்க சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.