Categories
மாநில செய்திகள்

தட்கல் முறையில் சினிமா டிக்கெட்…. தமிழக அரசு திட்டம் – கடம்பூர் ராஜு…!!

சினிமா டிக்கெட்டுகள் தட்கல் முறையில் வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக கடம்பூர் ராஜு தெரிவவித்துள்ளார்.

சென்னை திநகரில் தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கம் சார்பாக மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சினிமா டிக்கெட்டுகள் அதிக விலையில் விற்கப்படும். அதை தடுக்கும் விதமாக தட்கல் முறையில் குறைந்த விலையில் சினிமா டிக்கெட் எடுக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய படங்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக அரசின் கவனத்திற்கு வந்தால் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளா.ர் மேலும் விதிகளை மீறும் திரையரங்குகள் மீது மாவட்ட வருவாய் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |