ரஜினி குறித்த விஷயங்களை தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டாம் என்று கமல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன இதையடுத்து. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கோவையில் நிருபர்களை சந்தித்து பேசிய கமலஹாசன் மக்கள் நீதி மையத்தில் மனு நீதி அறக்கட்டளை அமைப்பு ஆதரவு அளித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது.
மேலும் ஊரே கூடி தான் தேரை இழுக்க வேண்டும் என தான் கூறிய விஷயங்கள் தற்போது நடந்து வருவதாக கூறியுள்ளார். பின்னர் நடிகர் ரஜினிகாந்தின் அறிக்கை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் கூறிய கமலஹாசன் ரஜினிகாந்தின் அறிவிப்பு அவருடையது என்றும், அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. அவர் எனக்கு நல்ல நண்பர். அவரது ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம் அவர் கூறிய விஷயங்களை குறித்து தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.