மாஸ்டர் படத்தின் லீக்கான காட்சிகளை வெளியிட்ட நபர் தற்போது படக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் அவரது ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகள் இணையத்தில் லீக்காகி உள்ளன. இதையடுத்து படத்தின் இயக்குனர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாஸ்டர் படத்தின் காட்சிகள் ஏதேனும் கண்ணில் தென்பட்டால் அதை மக்கள் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் பட காட்சிகளை இணையத்தில் லீக் செய்தது சோனி டிஜிடல் சினிமாஸ் நிறுவன ஊழியர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வில் படத்தயாரிப்பு நிறுவனம் அதை உறுதியும் செய்துள்ளது. மாஸ்டர் காட்சிகளை லீக் செய்தது தொடர்பாக தொடர்பாக தனியார் நிறுவன ஊழியர்கள் மீது புகார் அளிக்க தயாரிப்பாளர் லலித்குமார் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது.