Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் இந்துக்கள் மீது வன்முறை…. பிரிட்டன் பிரதமருக்கு… அனுப்பப்பட்ட கடிதம்…!!

பாகிஸ்தானின் இந்துக்கள் மீது தொடர்ந்து வன்முறை தாக்குதல் நடத்தப்படுவதாக பிரிட்டன் இந்து அமைப்பினர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். 

பிரிட்டனில் வசிக்கும் இந்து மக்கள் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி உள்ளனர். அதாவது இந்துக்கள் மன்றம், இந்து ஸ்வயம், சேவக் சங்கம், பிரிட்டன் இந்து கவுன்சில், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட 10 அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதன்படி, பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளதால் அவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கைபர் பக்துன்க்வா என்ற மாகாணதில் உள்ள கராக் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் இந்துக்களின் கோவில் ஒன்றை மர்மநபர்கள் இடித்துள்ளனர். மேலும் இதற்கு முன்பு இஸ்லாமாபாத்தில் கோவில் ஒன்றைக் கட்டுவதற்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அந்த நாட்டில் இந்துக்கள் மீதான இனப்படுகொலை மற்றும் துன்புறுத்துதல் வன்முறைகள் சமீப காலங்களில் மிகவும் அதிகரித்துள்ளது. மேலும், கோவில் இடிக்கப்பட்டதற்கு தகுந்த விசாரணை மேற்கொள்வதுடன் இந்துக்கள் மீதான வன்முறைகளையும் தடுக்க வேண்டும். இதற்காக அந்நாட்டின் பிரதமர் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

Categories

Tech |