தமிழகத்திற்கு முதல்கட்டமாக 5,56,500 கொரோனா தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்து அடைந்துள்ளது.
நாடு முழுவதும் வருகிற 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை மதுரை மாவட்டத்தில் ஜனவரி 16ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கின்றார்.
இந்நிலையில் புனேவில் இருந்து தமிழகத்திற்கு 5,56,500 தடுப்பூசி மருந்துகள் இன்று காலை வந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதையடுத்து 5,56,500 தடுப்பூசிகள் ஜனவரி 16ம் தேதியிலிருந்து மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையிலுள்ள மாநிலக் கிடங்கிற்கு கொண்டு வந்து பின்னர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.