Categories
உலக செய்திகள்

விமான பணிப்பெண்… குளியறையில் இறந்து கிடந்த சம்பவம்… வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

விமான பணிப்பெண் ஒருவர் குளியறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பிலிப்பைன்சில் விமான பணிப்பெண் christine tasera என்பவர் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட சென்ற இடத்தில் குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது christine tasera கார்டன் சிட்டி ஹோட்டலில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு சக ஊழியர்களுடன் சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்த குளியலறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.

இதனடிப்படையில் அவருடன் தங்கியிருந்த 11 நபர்களுடன் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. அதில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று நபர்களை கைது செய்த காவல்துறையினர் பின்பு அவர்களை விடுவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது christine tasera இறப்பதற்கு முன்பு அவருடன் தங்கியிருந்த 11 நபர்களில் ஒருவர் அவரை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதாவது கடந்த 31-ஆம் தேதி மாலையில் அந்த ஹோட்டல் christine taseraவின் அறையில் கதவை தட்டி ஒருவர்  முத்தமிட முயல்கிறார்.

மேலும் அந்த நபரின் பின்னால் பல ஆண்கள் பின் தொடர்கின்றனர். மேலும் christine tasera அந்த நபரிடம் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்கிறார். மேலும் அறையின் கதவையும் திறக்க முயன்றுள்ளார். ஆனால் அவரை விடாமல் தொடர்ந்து அந்த நபர் முத்தமிடுகிறார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. மேலும் அந்த நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரின் பெயர் Valintine Rosail. இதனால் கிறிஸ்டினா நிச்சயம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தான் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.

ஆனால், அங்குள்ள நகர வழக்கறிஞர் அலுவலகத்தில் தற்போது வரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்கள் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அவர் இழப்பிற்கு பாலியல் வன்கொடுமை காரணம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பெண்ணின் பெற்றோர் இரண்டாவதாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மேலும் அவர்கள், “என் மகள் அப்படி பட்டவள் கிடையாது அவள் இறப்பதற்கு முன்பு போதைப்பொருட்கள் கொடுக்கப்பட்டதுதான் துன்புறுத்தபட்டிருக்கிறார் என்று கதறியுள்ளனர்.

Categories

Tech |