கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து துறையினருக்கு சலுகைகளை வழங்க வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து தரப்பு கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கனவு தொழிற்சாலையான திரை துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே திரைத் துறையினருக்கு கேளிக்கை வரி ரத்து, மின்கட்டணம் – சொத்து வரியில் தமிழக அரசு வழங்க சலுகை வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் திரைத்துறை மட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து துறையினருக்கு சலுகைகளை வழங்க வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.