தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டை காண்பதற்கு ஜே.பி.நட்டா, ராகுல் காந்தி ஆகியோர் பொங்கலன்று வருகை தர இருக்கிறார்கள்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஒவ்வொரு ஆண்டும் தை பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும். அதேபோல் இந்தாண்டும் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் உலகப் புகழ் வாய்ந்த ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையின் போது நடைபெற இருக்கிறது.
இந்தப் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நாட்டா மதுரை மாவட்டம் அவனியாபுரம் வருகை தர இருக்கிறார். அதே நாளில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி மதுரை அவனியாபுரம் வருகை தந்து ஜல்லிக்கட்டை காண இருக்கிறார். எனவே காவல்துறையினர் மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய தலைவர்கள் வர இருப்பது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.