பிக்பாஸ் ஆரிக்கு அதிக ஓட்டு போடுமாறு பிரபல நடிகர் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4- வது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது . ஒவ்வொரு வாரமும் மக்களின் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வந்தனர். தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களாக ரியோ ,சோம், பாலா, ஆரி ,ரம்யா ,கேபி ஆகிய ஆறு பேர் உள்ளனர். இவர்களில் இந்த சீசனின் டைட்டிலை வெல்லப் போவது யார் ? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள்.
என் நண்பன் நடிகர் @Aariarujunan ஆரி அர்ஜுனாவிற்கு @vijaytelevision இன் #bigboss விளையாட்டு போட்டியில் நிறைய ஓட்டு போட்டு ஜெய்க்க வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் 🙏 #bigbosstamil4 #BigBossTamil #BigBoss4 #bigboss #AariArujunan #VijayTV pic.twitter.com/aLBHp03EMr
— Soundararaja Actor (@soundar4uall) January 11, 2021
பிரபலங்களும் ரசிகர்கள் பலரும் தங்களது ஆதரவை ஆரிக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆரிக்கு ஆதரவளித்து அவரது நண்பரும் நடிகருமான சௌந்தரராஜன் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் ‘என் நண்பன் நடிகர் ஆரி அர்ஜுனாவிற்க்கு பிக்பாஸ் போட்டியில் நிறைய ஓட்டுகள் போட்டு ஜெயிக்க வைக்க வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.