ரஜினி வரும் தேர்தலில் குரல் கொடுக்க மாட்டார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து தரப்பு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதாகவும், ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்தார். இதையடுத்து அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியலுக்கு வரவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் ரஜினி வரும் தேர்தலில் வாய்ஸ் கொடுப்பாரா? என்ற கேள்விக்கு காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ரஜினிகாந்த் அனைத்து மக்களையும் ஆரத்தழுவிக் கொள்ள நினைப்பவராக இருப்பதால் தனிப்பட்ட அமைப்புக்கோ, அரசியல் கட்சிக்கோ குரல் கொடுக்க மாட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார்.