நேபாளத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் குந்தன் சிங் (25). இவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் டயலாசிஸ் பெற்று வந்துள்ளார். இதையடுத்து கடந்த வருடம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டு வந்த போதிலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற முடியவில்லை.
இந்நிலையில் அந்த பிரச்சனையால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பை ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது. இளம் வீரரின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.