Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

1இல்ல…. 2இல்ல… 11மாவட்டம்… இடி, சூறாவளி என… மக்களுக்கு எச்சரிக்கை …!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், குமரிக்கடல் மற்றும் இலங்கை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பான்மையான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடனும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,  ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேதாரணியம் 18 சென்டிமீட்டர், பேராவூரணி 15 சென்டிமீட்டர்,  தலைஞாயிறு  11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்குகான  எச்சரிக்கையை பொறுத்தவரை சூறாவளி காற்று மணிக்கு 45 லிருந்து 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா, கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு இன்றும்…. நாளை குமரிக்கடல், லட்சத்தீவு மற்றும் மாலாத் தீவு பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவித்த படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |