திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கேரள அரசை அதிமுக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் நாட்டை ஆளும் அதிமுக அரசு கேரள அரசுகளின் சலுகைகளை முன்னுதாரணமாகக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்று ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில்,கேரள முதலமைச்சர் பி.விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு,கொரோனா தாக்கத்தின் தொடக்கத்திலிருந்தே மக்கள் நலனை கருத்தில் வைத்து அக்கறை செலுத்தி வருகின்றனர்.
பேரிடர் காலத்தில் அனைத்து துறை வேலைகளும் வருமான இழப்பை சந்தித்ததால் அனைவருக்கும் வழி சலுகைகளையும், சொத்துவரி போன்றவற்றிற்கு கால அவகாசத்தையும் அரசு வழங்கியது. திரையரங்கம் மின் கட்டணம் 50 சதவீதம் தள்ளுபடி என அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் திரைத்துறையை “கனவுத் தொழிற்சாலை” என்று அழைக்கின்றனர்.
திரைத் துறையில் ஏற்பட்ட முடக்கத்தால் அத்துறை சார்ந்த அனைவரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதனால் கேரள அரசை முன்னுதாரணமாகக் கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மின் கட்டணம், கேளிக்கை வரி, சொத்துவரி ஆகியவற்றிற்கு அதிமுக அரசு சலுகைகள் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.