நபர் ஒருவர் திருமணமான சில மாதங்களில் வீட்டிலிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்ற இளம்பெண் அபிஷேக் ஆர்யா என்பவருடன் முகநூல் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். அதன் பின்பு அபிஷேக் மற்றும் சுனிதாவிற்கு திருமணம் நடந்ததுள்ளது. மேலும் திருமணத்திற்கு பின்பு அபிஷேக் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் சுனிதாவிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். திருமணத்திற்கு பின்பு தான் சுனிதாவிற்கு அபிஷேக்கின் சுயரூபம் தெரியவந்துள்ளது.
இதனால் சுனிதா மன வேதனையில் இருந்துள்ளார். அதன் பின்பு சில மாதங்களில் அபிஷேக் வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார்.அப்போதுதான் வீட்டிலிருந்த மூன்று லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடிக்கொண்டு அபிஷேக் ஓடியிருக்கிறார் என்பதை கண்டுபிடித்த சுனிதா அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அபிஷேக் குறித்த தகவல் ஒரு ஆண்டாக கிடைக்காமல் இருந்துள்ளது.
இந்நிலையில் தற்போது அவர் கொல்கத்தாவில் இருப்பதாக சுனிதாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினருடன் சேர்ந்து கொல்கத்தாவிற்கு சென்ற சுனிதா, அங்கு அவருக்கு ஒரு குடும்பம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ஆனால் அங்கு அபிஷேக் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து அவரை தேடி வருவதாக கூறியுள்ளனர். மேலும் அபிஷேக் கிடைத்தால்தான் மோசடிகள் குறித்த விபரம் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.