Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் ஆபாச பேட்டி…! Prank என்ற பெயரில் அட்டகாசம்…! 3பேர் அதிரடி கைது …!!

இளம்பெண்களை குறிவைத்து ஆபாசமாக பேட்டி எடுத்து அதனை யூடியூப் சேனலில் பதிவேற்றிய  3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை பெசன்ட் நகர் பீச் பகுதியில் பிராங்க் என்ற பெயரில் பெண்களை பேட்டி எடுத்து நகைச்சுவையாக பேசுவது போன்று உரையாடி வீடியோ பதிவு செய்து அதை யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசியது போல் பதிவிடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்படி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் முருகன் தலைமை காவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் பெசன்ட் நகர் பீச் பகுதியில் சென்று பார்த்தனர். அங்கு இரு இளைஞர்கள் மைக், கேமராவை கொண்டு பெண்களிடம் நேர்காணல் எடுத்துள்ளனர். இதை தட்டி கேட்ட பொதுமக்களை ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளனர். இதை கவனித்த காவல்துறையினர் அவர்களை சாஸ்திரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் நல்லூரைச் சேர்ந்த தினேஷ் மற்றும் நீலாங்கரை சேர்ந்த ஆசின் பத்சா என்பதும் தெரியவந்தது. அவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள பெண்களை குறிவைத்து கேளிக்கையாக பேசி வீடியோ எடுப்பதோடு பெண்களை ஆபாசமாக காட்டும் வகையிலும் பதிவு செய்து, பின்னர் அதில் ஆபாசமாக மற்றும் அநாகரிகமான வார்த்தைகளை பேசுவது போல் கோர்வை செய்து தங்களது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளதாக தெரியவந்தது. இவர்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகவும், அதை ஏழு கோடி மக்கள் பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் யூடியூப் சேனல் உரிமையாளர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சேனலை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதைப்போன்று அனாகரிகமான செயலில் ஈடுபடுபவர்களை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் இந்த தொலைபேசி எண்ணிற்கு (8754401111) அழைத்து புகார் அளிக்கலாம் என அடையாறு துணை ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |