கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் புகழ்துள்ளது.
ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை பல்வேறு மாநில முதல்வர்களும் , அரசியல் கட்சியினரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் , கருணாநிதி தமிழ்நாட்டின் நீண்ட கால முதலமைச்சராக பதவி வகித்தவர். அவர் திராவிட இயக்கத்தின் , தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி. அவருடைய பிறந்த நாள் விழாவில் அவருடைய பங்களிப்புகளை நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம் என்று பதிவிட்டுள்ளது .
M. Karunanidhi was a prolific writer who went on to become the longest serving Chief Minister of Tamil Nadu. He was a stalwart of the Dravidian movement & a true representative of the Tamil people. We remember his contributions on his birth anniversary. pic.twitter.com/SjVFN0mfDy
— Congress (@INCIndia) June 3, 2019