Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாஜகவை ஆதரிக்க…. ரஜினி முடிவெடுக்கணும்… கௌதமி கருத்து…!!

ரஜினி பாஜகவை ஆதரிப்பதற்கு முடிவு எடுக்க வேண்டும் என நடிகை கௌதமி கூறியுள்ளார் .

பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ‘நம்ம ஊர் பொங்கல்’ என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. விருதுநகரில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு நம்ம ஊரு பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான நடிகை கௌதமி பொங்கல் வைத்து நிகழ்ச்சியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர்.

அதன் பின்னர் பெரிய மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நடிகை கௌதமி நிருபர்களிடம் கூறியது, “பாஜக தமிழகத்தில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. கூட்டணியில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இலக்கை அடைய வேண்டும். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து தற்போது எந்த கருத்தும் இல்லை. யாருடைய முதுகிலும் சவாரி செய்ய வேண்டும் என்கிற அவசியம் பாஜகவுக்கு கிடையாது.

தேர்தல் வரை உறுதியாக எதையுமே சொல்ல முடியாது. ரஜினிகாந்த் பாஜகவை ஆதரிப்பேன் என முடிவு செய்யவேண்டும். இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட சிறப்பாக அமையும் என கூறினார். அதன் பின்னர் மாரியப்பன் கோவில் தெருவில் கோலப் போட்டிகள் நடைபெற்றன. அதனை பார்வையிட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Categories

Tech |