தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி என்று ராகுல் காந்தி ட்வீட் செய்து கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூர்ந்துள்ளார்.
ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், அவரது பிறந்த நாள் விழாவில் கலைஞர் கருணாநிதியை நினைவு கூர்கிறார். புகழ்பெற்ற தமிழ் மக்களின் உண்மையான தலைவர், யாருக்கு நினைவு மறந்து போயிருக்கும் என்று ட்வீட் செய்துள்ளார்.
Remembering Kalaignar Karunanidhi on his birth anniversary. A true leader of the glorious Tamil people, whose memory will never fade away.
— Rahul Gandhi (@RahulGandhi) June 3, 2019