Categories
அரசியல் மாநில செய்திகள்

தைப்பூசத்திற்கு காவடி எடுத்து ஆடும்… தமிழக பாஜக தலைவர்…!!!

தைப்பூச திருநாளன்று பழனி சென்று காவடி எடுக்க உள்ளதாக தமிழக பாஜக தலைவர் முருகன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் இதுவரை முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என கூறி வந்த தமிழக பாஜக தலைவர் முருகன், முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்ற சிடி.ரவியின் கருத்துதான் எங்கள் கருத்தும் என்று அப்படியே அந்தர் பல்டி அடித்துள்ளார். தைப்பூச திருநாளன்று பழனி சென்று காவடி எடுக்க உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |