Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நம்பிக்கையோடு வந்தோம்… ஆனா இப்படி நடக்குது… கலெக்டர் அலுவலகத்தில் புலம்பும் பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு சென்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டமானது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே அதிகாரிகளை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளிப்பதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தடுப்பதற்காக அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் திங்கட்கிழமையன்று வைக்கப்படும் பெட்டியில் கோரிக்கை மனுக்களை செலுத்துமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

ஆனாலும் அதனை ஏற்காத பொதுமக்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால், போலீசார் அவர்களை சோதனை செய்து அதன்பின் அவர்களை உள்ளே செல்ல அனுமதித்தனர். அதன் பின் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுவை செலுத்தினர். அப்போது  கலெக்டர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை, இதில் இப்படி பெட்டியில் போட சொன்னால் தங்களது பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க முடியும் என்று பொதுமக்கள் புலம்பிக் கொண்டே சென்றனர். இதேபோல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளிலும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவினை போட்டு விட்டு சென்றனர்.

Categories

Tech |