வாட்ஸ்அப்பிற்கு சிறந்த மாற்றாக சிக்னல் செயலியா? அல்லது டெலிகிராமா? என்று பார்க்கலாம்.
வாட்ஸப் செயலியின் புதிய கொள்கைகள் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருந்த நேரத்தில், உலகின் ஆகச்சிறந்த டெக் ஜீனியஸ்களில் ஒருவரான எலான் மஸ்க், “Use Signal” என ஒரு ட்வீட்டை தட்டிவிட்டார். ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனத்தை அடிக்கடி விமர்சித்து வந்த மஸ்க், இந்த ட்வீட்டை பதிவிட்டதும், ஏராளமான அவரது ஃபாலோவர்கள் வாட்ஸப்பில் இருந்து வெளியேறியதோடு, சிக்னல் செயலியை முண்டியடித்துக்கொண்டு இன்ஸ்டால் செய்தனர். இதன் பலனாக சிக்னல் செயலியின் சர்வர் க்ராஷ் ஆகும் நிலைக்குச் சென்றது. அதேபோல, ப்ளே ஸ்டோரின் தகவல் பரிமாற்றத்திற்கான செயலிகளின் பட்டியலில் முதலிடத்திற்கும் வந்தது சிக்னல்.
இதன் பாதுகாப்பே open source Signal Protocol அடிப்படையில் செயல்படும் இந்தச் செயலி, வாட்ஸப்பை போலவே “எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன்” செய்யப்பட்டது. வீடியோ கால், குரூப் சாட் போன்ற வாட்ஸப்பில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த சிக்னல் செயலி, பயனர்களின் இணைய அடையாளமான ஐபி அட்ரஸ்ஸை அடையாளம் காட்டாமல் இருக்க, “சிக்னல்” சர்வரில் அல்லாமல் ரிலே கால் மூலம் மற்ற பயனர்களைத் தொடர்பு கொள்ளும் வசதியையும் அளிக்கிறது.
இப்படிப் பாதுகாப்பு மற்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் சிக்னல், லாப நோக்கில்லாத “சிக்னல்” பவுண்டேஷன் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. சிக்னல் அளவுக்குப் பாதுகாப்பு வசதிகளை வழங்காதபோதும், தற்போதைய வாட்ஸப் கொள்கைகளை ஒப்பிடுகையில் டெலிகிராம் அதன் பயனர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்கி வருகிறது. டெலிகிராம் செயலியில், “எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன்” தானாக இயங்காது என்றாலும், secret chat வசதியைப் பயன்படுத்தும்போது, “எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன்” செயல்படத் துவங்குகிறது.
இருப்பினும், டெலிகிராம் செயலியில் உள்ள பயனர்களின் தரவுகள் முழுவதும் பாதுக்கப்படுவதாகவும், இவற்றை யாராவது பார்வையிட வேண்டுமென்றாலும் நீதிமன்ற அனுமதி பெறவேண்டும் என்கிறது அந்நிறுவனம். அதேபோல, இதுவரை பயனர்கள் தகவல்கள் எதையும் மூன்றாம் நபர்களுடன் பகிர்ந்துகொண்டதில்லை எனவும் டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.