Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி” உலக கோப்பை கேப்டனின் பயிற்சியாளர் மரணம்….!!

இந்திய அணியின் முதல் உலக கோப்பை நாயகன் கபில் தேவ்வின் பயிற்சியாளர் தர்மலிங்கம் மரணமடைந்துள்ளது கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்திய விமானப்படையில் முன்னாள் அதிகாரியாகவும், தமிழ்நாடு மற்றும் அகில இந்தியளவில் பல வீரர்களுக்கு பயிற்சியாளராகவிளங்கியவர் தர்மலிங்கம். இவர் இந்திய கிரிக்கெட் அணி  முதல்முறையாக உலகக்கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்த அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்க்கு பயிற்சியாளராக பணியாற்றியவர்.1983_ஆம் ஆண்டில் இவரின் பயிற்சியின் கீழ் தான் இந்திய கிரிக்கெட் அணி அணி உலகக்கோப்பையை வென்றது.

ரஞ்சி கிரிக்கெட் கோப்பை போட்டியை  பலமுறை விளையாடியுள்ள தர்மலிங்கம்  29 போட்டி விளையாடி 1132 ரன்களும்  44 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். மேலும் இவர் தமிழக மகளிர் கிரிக்கெட் அணிக்கும் பயிற்சி அளித்துள்ளார் .இவர் நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது உடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Categories

Tech |