சென்னை முழுவதிலும் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் செல்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஆனாலும் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சுற்றுலா தளங்கள் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழக அரசு இதனை அறிவித்தது.
இந்நிலையில் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னையில் உள்ள வண்டலூர் பூங்கா, கிண்டி தேசிய பூங்கா, மாமல்லபுரம் மற்றும் மெரினா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் செல்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை அன்று மக்கள் கூடுவதால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.