Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அச்சம் வேண்டாம்… பரவாமல் தடுக்க நடவடிக்கை…!!!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், கேரளாவில் புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.  தற்போது இந்தியாவில் 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் மற்ற மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எல்லைகளை கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுக்கள்இருப்பதாகவும் தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |