கொலை செய்த வழக்கில் கைதான குற்றவாளி தற்போது ஜாமினில் வெளிவந்து தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர் பள்ளத்தில் பால்பாண்டியின் மகன் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருதம் நகரில் வசித்து வந்த வாலிபரை கொலை செய்த குற்றத்திற்காக கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையில் சுப்பிரமணிக்கு வலிப்பு நோய் உள்ளதால் அதற்கான மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுப்பிரமணியனின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.