நடிகர் தனுஷ் நடித்து வரும் படத்தின் அப்டேட்டை நடன இயக்குனர் ஜானி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது . இதையடுத்து நடிகர் தனுஷின் 43 வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். இவர் துருவங்கள் பதினாற, மாபியா போன்ற படங்களை இயக்கியவர். தற்போது d43 என தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட் ,சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் .
.@dhanushkraja Sir's #D43 1st song shoot wrapped up 😍
Stay Tuned to witness the super massss moves for the mass track sung by #Dhanush sir, written by @Lyricist_Vivek garu with @gvprakash 🎶
@SathyaJyothi_ @karthicknaren_M @MalavikaM_ @smruthi_venkat @thondankani pic.twitter.com/gIaW5Sf2gM
— Jani Master (@AlwaysJani) January 12, 2021
பிரபல பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்கு திரைக்கதை , வசனம் எழுதியுள்ளார் . கடந்த வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நடன இயக்குனர் ஜானி தனது ட்விட்டர் பக்கத்தில் d43 அப்டேட்டை வெளியிட்டுள்ளார் . அதில் இந்த படத்தின் முதல் பாடல் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளார். விவேக் எழுதியுள்ள இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.