Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு தடை… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தற்போது வரை 78 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மூன்று பேரால் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, நான்கு பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

Categories

Tech |