மண் சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை என்னும் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசிப்பவர் கோட்டைச்சாமி என்ற முதியவர். இவர் ஒரு விவசாயி. நேற்று முன்தினம் தன்னுடைய விவசாய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஓயாத மழையினால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.
மண் சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கிய கோட்டைசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கேள்விப்பட்ட திருவேகம்பத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். அதன் பின்னர் தேவகோட்டை தாசில்தார் சேகர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு அந்த முதியவரின் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னார்.