Categories
சினிமா தமிழ் சினிமா

‘கபடி கபடி கபடி’… கில்லியாக களமிறங்கிய ‘மாஸ்டர்’ விஜய்… ரசிகர்களை உற்சாகப்படுத்திய புதிய புரோமோ…!!!

நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து உள்ளனர். நாளை திரையரங்கில் வெளியாகும் மாஸ்டர் படத்தை காண ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர் .

தொடர்ந்து ஏழு  நாட்களாக மாஸ்டர் படத்தின் புரோமோக்கள் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதில் விஜய்யின் மாஸ் வசனங்கள், வாத்தி கம்மிங் ,மற்றும் வாத்தி ரைடு பாடல் ப்ரோமோ க்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் கில்லி வேலுவாக களமிறங்குகிறார் மாஸ்டர் விஜய் . நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான கில்லி படத்தில் இடம்பெற்ற கபடி கபடி பாடலின் ரீமிக்ஸ் பாடலுடன் வந்த இந்த புதிய புரோமோவால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 

Categories

Tech |