Categories
தேசிய செய்திகள்

பறவை காய்ச்சல்… இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டாம்… மத்திய அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டை தடை விதிக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், புதிதாக பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதிலும் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டை தடை விதித்து வருகிறது.

இதனையடுத்து ஆசியாவின் மிகப் பெரிய சந்தையான டெல்லி காசிப்பூர் மண்டியை மூடவும் பரிசீலனை நடைபெறுகிறது. நன்கு வேக வைத்து சமைத்து சாப்பிட்டால் பீதியடைய தேவையில்லை என்றும் மாநில அரசுகள் தடை விதிக்க அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |